நாளை சிறுவர் தினத்தை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில், நாளை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, தலைவி எம்.சுகந்தி அறிவித்துள்ளார்.

நாளை காலை 11.00 மணியளவில், யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள, காணாமல்போனோர் அலுவலகம் முன்பாக போராட்டம் இடம்பெறவுள்ளதாக, இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது……

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் போது இரானுவத்தினரிடம் பல நூற்றுக்கனக்கான சிறுவர்கள் சரணடைந்ததுடன் பல நூற்றுக்கணக்கான சிறுவர்களை இரானுவத்தினர் கைதும் செய்திருந்தனர்.

ஆயினும் அச் சிறுவர்களை இதுவரையில் மீளக் கையளிக்கப்படவில்லை. இதனால் சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதுதெரியாத நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்கள் கோரிவருகின்றனர்.

இதற்கமைய சிறுவர் தினத்தைமுன்னிட்டு தமது பிள்ளைகளான சிறுவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே சிறுவர்கள் தினத்தில் சிறுவர்களை மீட்கவேண்டுமென வலியுறுத்தி நடைபெறவிருக்கும் போராட்டத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள். பொதுமக்கள் என பலதரப்புக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கிறோம் என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!