அரசில் அழுத்தமே கோட்டாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு காரணம் : பீரிஸ்

அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொதுஜன பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியே, ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வேட்பாளராக தன்னை பெயர் குறிப்பிடுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ முன்னெடுத்த செயற்பாடுகள் முறையற்றதாகும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை, அரசியல் ரீதியில் எதிர்க்க முடியாதவர்கள், இன்று முறையற்ற விதத்தில், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

அரசியல் அழுத்தங்களின் பிரகாரமே சட்டமா அதிபர் திணைக்களம் செயற்படுகின்றது என்பது, தற்போது ஆதார பூர்வமாக வெளிப்பிட்டுள்ளது.

அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, முன்னாள் சொலிஷ்டர் ஜெனரால் தில்ருக்ஷ டயஸ் விக்ரமசிங்க குறிப்பிட்டதை தொடர்ந்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் முழுமையாக இன்று மறக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!