21 ஆவது நாளாக தொடரும், தென்கிழக்கு பல்கலை, கல்விசாரா ஊளியர்கள் போராட்டம்!

அம்பாறை மாவட்டம் தென் கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தொடர் பணிபகிஷ்கரிப்பில், 21 வது நாளான இன்று, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

2500 ரூபா சம்பள உயர்வு, ஏனைய அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும், கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவதேன் என கோசம் எழுப்பினர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!