அம்பாறை பொத்துவிலில்,பிரதேச கலை, இலக்கிய விழா!

கலாசார அலுவல்கள் திணைக்களமும் பொத்துவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய, அம்பாறை பொத்துவில் பிரதேச கலை, இலக்கிய விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் பொத்துவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கரி கிருஸ்ணகுமார் தலைமையில், பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்று.

பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்துகொண்டார்.

நிகழ்வில், பொத்துவில் பிரதேச தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய பாடல்கள் என்பனவும் நடைபெற்றன.

தொடர்ந்து, பிரதேச மட்ட ரீதியாக நடாத்தப்பட்ட சிறுகதை, பாடலாக்கம் மற்றும் இலக்கிய போட்டிகளில் பங்குகொண்டு வெற்றி பெற்ற பிரதேச கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், உதவி திட்டமிடல் பணிப்பார் எம்.எம்.ஜனுஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு, பிரதேச கலை, இலக்கிய விழாவினை சிறப்பித்து இருந்தனர். (சி)

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!