தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி நிறைவு!

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேர்க்கும் பணி இன்றுடன் நிறைவடைகின்றது.

அதேவேளை ஒக்டோபர் மாதம் 30ம் மற்றும் 31ம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துடுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள் நவம்பர் மாதம் 01ம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்  ஆணைக்குழு தெரிவித்துடுள்ளது .

அதே வேளை ஏதேனும்  காரணத்தினால் ஒக்டோபர் 30, 31 மற்றும் 01 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்கு  தடை எற்ப்பட்டால்  நவம்பர் 7ம் திகதி வாக்களிப்பதற்கான விசேட தினமாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய  2018ம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!