புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (30) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

புகையிரத மற்றும் தபால் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

இருப்பினும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!