திருக்கோவிலில் விபத்து:பொத்துவில் பிரதேச சபை செயலாளர் மரணம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் இரும்பு பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தங்கராசா சாயிதாசன் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிர் இழந்தவரின் சடலம் தற்போது திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

விபத்தில் மரணமடைந்தவர் ஆலையடிவேம்பு பனங்காடு சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் அரச உத்தியோகத்தர் என்பதுடன், இவர் கடந்த வருடம் இடம்பெற்ற நிர்வாக சேவையின் அதியுயர் தரத்திற்கான சுப்பரா பரீட்சையில் சித்தியடைந்து பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராக அண்மையில் நியமனம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!