பிரிட்டன் நாடாளுமன்ற விவகாரம்: மன்னிப்புக் கோரினார் பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் சட்ட விரோதம் என பிரிட்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்திடம், பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தை 5 வார காலத்துக்கு முடக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுத்தார்.
இதனை பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தும் ஏற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான கெடு நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காவே பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

ஆனால் பிரிட்டன் பிரதமர், புதிய அரசின் கொள்கைகளை அறிவித்து இராணி இரண்டாம் எலிசபெத் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகத்தான் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக கூறினார்.

பிரிட்டன் பிரதமரின் கூற்று ஏற்கப்படாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக ‘பிரெக்ஸிட்’ எதிர்ப்பாளரான ஜினா மில்லர், பிரிட்டன் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்று, நாடாளுமன்ற முடக்கம், சட்டவிரோதம் என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.
இது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தர்மசங்கடமாக அமைந்தது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் மகாராணியிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாக பிரிட்டன் ஊடகங்கள்; செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!