நியூசிலாந்து தலைநகரில் குண்டு வெடிப்பு அபாயம்-தேடுதல் தீவிரம்

நியூசிலாந்து தலைநகரில் குண்டு வெடிப்பு அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் குண்டு தொடர்பில் எழுப்பப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தின் ஊடகமொன்று, அந்நாட்டின் தலைநகரில் குண்டு வெடிக்கப்படும் அபாயம் இருப்பதாக செய்தி வெளியிட்டமையினை தொடர்ந்து வெலிங்டன் பொலிஸாரினால் நகர் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அத்துடன் நகரில், மக்கள் நடமாட்டம் பொலிஸாரினால் கட்டுப்படுத்தப்பட்டதுடன், வியாபார தளங்கள் உட்பட அந்நகரின் முக்கிய தளங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வெலிங்டனின் முக்கிய தெருக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நியூசிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பான முக்கிய தகவல்கள் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!