ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் – பந்துல குணவர்தன

 

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இது வரையான பிரச்சினைகள் எழுந்திருக்காது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரபலமான எதிர்கட்சியினால் ஜனவரி 5 ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடத்தில் பலமான அழுத்தங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் இந்தப் பிரச்சினைகள் எல்லாமே இருந்திருக்காது.

அதற்காகவே மஹிந்த ராஜபக்ச மிகவும் தீர்க்கமான நிலையில் தனது கழுத்தை கொடுத்தார்.

இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமரான மஹிந்த ராஜபக்ச பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது, நாங்கள் நேரடியாக ஆட்சியைக் கைப்பற்ற செல்லவில்லை. மாறாக தேர்தலுக்கே செல்லவிருந்தோம்.

கடந்த ஜனவரி 5 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் தெரிவுகளை செய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க முன்வந்திருந்தோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான பொறுப்புக்களை, நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனை 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தவர்களே ஏற்க வேண்டும்.

அதற்காகவே நாங்கள் தேர்தலுக்கான சந்தர்ப்பத்தை வழங்க வலியுறுத்துகிறோம்.

கடந்த ஆண்டில் உடனடியாக ஜே.வி.பியினரால் கடிதமொன்று அவசர அவசரமாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

உடனடியாக அது கலந்துரையாடப்படாமலும் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாமலும் விவாதத்திற்கு எடுக்கப்படாமலும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு சபாநாயகரினால் குரல் மூலம் அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

அவ்வாறு அன்று இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இன்று வரையிலான பிரச்சினைகளும் எழுந்திருக்காது’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!