ஹபரணையில் யானைகள் உயிரிழந்தமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

அனுராதபுரம் மாவட்டம் ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிற்கு வனஜீவராசிகள் அமைச்சினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை இன்று மாலைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில் யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுந்தினம் மாலை 7 யானைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உடலில் விஷம் கலந்தமை காரணமாக யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்த யானைகளின் உடற்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!