முல்லை, புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும்போது கடந்த கால போரின்போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு வீட்டின் உரிமையாளரினால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் குறித்த இடத்தில் அடையாளம் காணப்பட் 8 கிளைமோர் குண்டுகளையும் 60 டெட்டனேட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கையை புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!