தேசிய அறநெறி கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

தேசிய ஒருமைப்பாடு, அரச, கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் வழிகாட்டலுடன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய அறநெறி கல்விக்கான விழிப்புணர்வு இறுதிநாள் விசேட நிகழ்வு இன்று கண்டியில் நடைபெற்றது.

கண்டி இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் பிரதி தலைவருமான வேலுக்குமார் கலந்துகொண்டார்.

அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனின் இணைப்புச் செயலாளர் ரவி, கண்டி மாநகர சபை உறுப்பினர்கள், இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது, அறநெறிக் கொடி விநியோகம், அறநெறி ஆசிரியர்களுக்கன புதிய பாட கற்கை நெறிக்கான கை நூலகள்; விநியோகம் என்பன இடம்பெற்றன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!