கோட்டாவுக்கு எதிராக மகேஸ் சேனநாயக்கவின் அதிரடி முடிவு!

தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது.

இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அநுரகுமார திஸநாயக்கவும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!