அம்பாறை சாய்ந்தமருதில், கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது மாவடி வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 15 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் உப பொலிஸ் பரிசோதகர் அனுஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது குறித்த பகுதியில் இரு மாடிகளை கொண்ட வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்து நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை பறிமுதல் செய்ததுடன் வீட்டில் குடியிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மைக் காலமாக குறித்த பகுதியில் அதிகளவான போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பன அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

அத்துடன் மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 30 இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!