வவுனியாவில், பனை விதைப்பு செயற்றிட்டம்!

வவுனியா கள்ளிக்குளத்தில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஒரு இலட்சம் பனை விதைப்பு செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டமாக, பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் கள்ளிக்குளம் கிராமத்தில் இன்று ஆரம்பமாகியது.

கள்ளிகுளம் கிராம அலுவலர் சர்வேந்திரன் தலையில் நடைபெற்ற பனை விதைப்பில், கள்ளிகுள கிராம அபிவிருத்தி, மாதர் அபிவிருத்தி, விளையாட்டு இளைஞர் கழக சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பனை வளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தாடல்களும் இடம்பெற்றன.

தொடர்ந்து வீதி ஓரங்கள், மைதானங்கள், குளக்கரைகள், காடுகளின் எல்லைகள் என்பவற்றில் பனைவிதைகள் நடப்பட்டன.

மேலும் ஒரு குடும்பத்துக்கு பத்து விதைகள் வீதம் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகளிலும் பனை விதைகள் நாட்டப்பட்டன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!