கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலம் திறந்துவைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தினை, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், அமைப்பாளர்கள், நூற்றுக்கணக்கான மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!