வுவுனியாவில், மைக்ரோ சொப்ட் நிறுவன தொழிநுட்ப மாநாடு!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் இணைய தொழிநுட்ப மாநாடு இன்று நடைபெற்றது.

மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் இலங்கைக்காக பிரதிநிதிகளான ம.விக்னராஜ், க.ஹட்சனா மற்றும் அசிஸ்ரியா நிறுவனத்தின் பணிப்பாளர் ப.லதீப் ஆகியோர் வளவாளர்களாகக்; கலந்துகொண்டு இணையத்தின் பயன்பாடும், அதில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் பங்கும், இணையத்தில் எவ்வாறு கோப்புகள், மென்பொருட்களை இலகுவாக சேமித்து செயற்படுத்துவது, இணையம் மூலம் எவ்வாறு இலாபம் ஈட்டுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மாநாட்டில் தொழிநுட்ப ஆர்வலர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட துறைசார்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!