நவராத்திரிவிரதம் இன்று ஆரம்பம்!

உலக இயக்கத்தின் ஆற்றலாக விளங்கும் சக்தியின், அருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அனுஸ்டிக்கப்படும் நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகியது.

இதனடிப்படையில், முதல் மூன்று நாட்களும் துர்க்கையை வேண்டியும், அடுத்துவரும் மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வழிபடுவார்கள்.

நவராத்திரி விரதத்தின் இறுதி நாள் அன்று, விஜயதசமி விழா கொண்டாடப்படும்.

நவராத்திரி விரத நாட்களில் ஆலயங்கள், பாடசாலைகள், வீடுகள், வேலைத்தளங்கள், கல்விக்கூடங்கள், கலைக்கூடங்களில் பூரணகும்பம் வைத்து, சகலகலா வல்லிமாலை படித்து வழிபடுவது இந்துக்களின் மரபாகும்.

இதனடிப்படையில், இன்றைய தினம் எமது டான் தொலைக்காட்சி குழும தலைமைக்காரியாலயத்தில் நவராத்திர விரத விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பூஜை வழிபாடுகள் யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேஸ்தான குருக்கள் கமலராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது டான் தொலைக்காட்சி குழும நிர்வாக உத்தியோகத்தர் ரேவதி நிர்மல் உட்பட பணியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!