மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு!

மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா, தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் இன்று காலை 7.15 மணியளவில் திருவிழா திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில், திருப்பீடத்தின் இலங்கைக்கான திருத்தூதுவர் பேராயர் கலாநிதி பீற்றர் நியான் வன் ரெட் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

475 ஆவது ஆண்டு நிறைவு விழா திருப்பீடத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மன்னாரில் 1544ஆம் ஆண்டு கத்தோலிக்க விசுவாசத்திற்காக இன்னுயிர் ஈர்ந்த மக்களை நினைவுக்கூர்ந்து, அவர்களை கத்தோலிக்க திரு அவையின் மரபுக்கேற்ப புனிதர்களாக உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.திருவிழா திருப்பலியை தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை ஓய்வு பெற்ற ஆயர் மேதகு கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை, மறை மாவட்டங்களை சேர்ந்த குரு முதல்வர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மறைசாட்சிகளின் புனித மரணம் கத்தோலிக்க விசுவாசத்திற்கான ஒரு எடுத்துக்காட்டான மரணமாக அமையப்பெற வேண்டுமெனவும், மறை மாவட்ட ரீதியிலான முயற்சிகளை எடுத்து அவர்களுக்கான பக்தி முயற்சிகளை மேற்கொண்டு, அவர்களிடம் இரந்து கேட்டு திருப்பீடம் அவர்களை அங்கிகரிக்கும் நிலைக்கு அவர்கள் வருவதற்கான பல்வேறு முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்த 475ஆவது ஆண்டு நிறைவு விழாவு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!