ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் எதிர்வரும் புதன்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள வேட்பு மனு தாக்கல் குறித்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையிலும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!