நாட்டின் அபிவிருத்திக்கு ஊழல் தடையாக உள்ளது: ரஞ்சித் ஆண்டகை!

நாட்டில் ஊழல் அதிகரித்து காணப்படுகின்றமையினாலேயே, நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

‘சிறு முதலாளிகள் முதல் உயர் இடங்களில் உள்ளவர்கள் வரை ஊழல் பாதையிலேயே பயணிக்கின்றனர்.

இதற்கு எதிராக செயற்படாவிடின் இலங்கையை முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்ல முடியாது. நாம் எவ்வளவு கூறினாலும், மீண்டும் மீண்டும் செய்யக்கூடாத விடயங்களையே செய்கின்றனர்.

முதுகெலும்பு இல்லை என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மேலும், மத வாழ்க்கையை முதுகெலும்பாக வாழ்வதன் முக்கியத்துவத்தை நம் மக்கள் மறந்து விட்டார்கள். நாம் சமுதாயத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிந்தனை புரட்சி தேவை.’ என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!