கட்சியை விட்டுவிலகியவர்களுக்கு சஜித் அழைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகியவர்களை மீண்டும் கட்சிக்கு திரும்புமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அத்துடன் வேட்பாளர் நியமனத்துக்காக நிபந்தனை விதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் தெரிவு செய்யப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்பு கூட்டு எதிரணிக்கு ஆதரவளித்த ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்று தான் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சியினர் அறிவித்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் கட்சித் தாவல்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!