மேல் மாகாண சபை முன்னாள் ஆளுர் அசாத் சாலி, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன், தற்பொழுது முன்னிலையாகியுள்ளார்.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, குண்டுத் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
அதன் பின்னர், அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில், மேல் மாகாண சபை முன்னாள் ஆளுர் அசாத் சாலி, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன், தற்பொழுது முன்னிலையாகியுள்ள நிலையில், வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.