அம்பாறையில் மருத்துவ ஆலோசனை முகாம்!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் சிரேஸ்ட பிரஜைகள் மற்றும் நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது.

மருத்துவ முகாமானது சமூக சேவைகள் அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் விநாயகபுரம் சக்தி வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் மருத்துவ முகாமில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மருத்துவ மற்றும் மருத்துவ ஆலோசனை முகாமின் ஊடாக நீரழிவு, உயர் குருதி அழுத்தம், தோல் நோய்கள், ஆயுர் வேத மருத்துவம் மற்றும் ஏனைய நோய்களுக்கான சிகிச்சைகள் நடைபெற்றதுடன் நோய் காப்பு தொடர்பான விழிப்பணர்வு கருத்துக்களும் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.

நிகழ்வில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன், தம்பிலுவில் ஆயுர் வேத வைத்தியர் கோபிநாத் பிரதேச செயலக கிராம நிர்வாக அதிகாரி கண.இராஜரெத்தினம், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் உத்தியோகத்தரகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!