கிளிநொச்சியில் தமிழர் பண்பாட்டு பெருவிழா!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக கலாசார விழுமியங்களை எடுத்தியம்பும் பொம்மலாட்டம், மயில் ஆட்டம், பொய்கால் குதிரை, பறை, சிலம்பாட்டம், தவில் இசை உள்ளிட்ட ஊர்வலத்துடன் ஆரம்பமானது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தமிழ் மன்னர்களை பறைசாற்றும் வகையில் ஊர்தி பவனியுமம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்து கொண்டார்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த நிகழ்வு 2 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது.

அழிந்துவரும் தமிழர் பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் வகையிலும், அவற்றை வளர்க்கும் நோக்குடனும் குறித்த பண்பாட்டு பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!