மன்னார் மறை மாவட்ட குடும்ப நல பணியகத்தில் விசேட கருத்தமர்வு!

மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று விசேட கருத்தமர்வு ஒன்று இடம் பெற்றது.

‘உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்’ எனும் தொணிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று விசேட கருத்தமர்வு இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட குடும்ப நலப்பணியகம் மற்றும் பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை எஸ். எமிலியானுஸ்பிள்ளை தலைமையில் கருத்தமர்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

குறித்த கருத்தமர்வில் சிறப்பு வளவாளராக கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகளார் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனை தீர்த்துக்கொள்ளுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த கருத்தமர்வில் பங்கு சமூகத்தினர், அரச, அரச சார்பற்ற அதிகாரிகாரிகள், சமூக சேவையாளார்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சட்டத்தரணிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!