கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனானது விநாயகர் விளையாட்டு கழகம்!

 

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய சரவனை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கேட் சுற்றுப் போட்டியில் விநாயகர் விளையாட்டு கழகம் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டதுடன் இரண்டாம் இடத்திற்கு விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.

இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது கடந்த மாதம் 18ந் திகதி ஆரம்பமானது. இச் சுற்றுப்போட்டிக்கு ஆலையடிவேம்பு முதல் கோமாரி வரையான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 26 விளையாட்டுக் கழகங்கள்  பங்கு கொண்டன.

இறுதிச் சுற்றுக்கு விநாயகபுரம் மின்னொளி மற்றும் விநாயகபுரம் விநாயகர் ஆகிய இரு அணிகளும் தெரிவாகி இருந்தன.

இந்நிலையில் இச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று மாலை  விநாயகபுரம் மகாவித்தியாலய மைதானத்தின் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் உபதலைவர் கை.கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது விநாயகர் அணி முதலாவதாக ஆட்டத்தை ஆரம்பித்த விநாயகர் விளையாட்டு கழகம்  பத்து ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பக்கு எண்பத்திநான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதேவேளை பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம் 9:3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பதினான்கு ஓட்ட வித்தியாசத்தில் விநாயகபுரம் மின்னொளி கழகத்தினை விநாயகபுரம் விநாயகர் கழகத்தினர் வெற்றி கொண்டதுடன், வெற்றிக் கிண்ணத்தையும் 20ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் தட்டிச் சென்றனர்

இச் சுற்றுப் போட்டியில் ஆட்ட நாயகனாக விநாயகர் கழகத்தினைச் சேர்ந்த, கே.கோபிநாத் மற்றும் ஜ.கவிதாஸ் ஆகியோர் தெரிவாகினர்.

தொடர் ஆட்டநாயகனாக தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினைச் சேர்ந்த ராஜீதன் தெரிவாகினார்.  இதனைத் தொடர்ந்து இச் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் 14 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக விநாயகபுரம் விநாயகர் கழகத்தினைச் சேர்ந்த எம்.ஜீனோஜ் தெரிவாகினார்.

சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், சபை உறுப்பினர்களான கே.காந்தரூபன், கே.கமல் மற்றும் திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் ஜீ.விநாயகமூர்த்தி மற்றும் மதகுருமார்கள், வங்கி முகாமையாளர்கள், அனுசரனையாளர்கள்,  விளையாட்டு வீரர்கள்,  நிருவாகிகள் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் கலந்த கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!