ஶ்ரீ.சு.கவின் விசேட கூட்டம் நேற்று இடம்பெற்றது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஒன்று நேற்று (27) இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் திங்கட் கிழமை (30) இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!