சஜித்தை நிச்சயம் தோற்கடிப்போம் : மஹிந்த!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், அன்னச் சின்னத்தில் களமிறங்குகின்ற, ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடிப்போம் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இன்று காலை கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், சாந்தி கர்மா பயிற்சியாளர்களுக்கான விசேட மாநாட்டை நடத்தியது.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

இதன் போது உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தோற்கடிப்போம் என, நம்பிக்கை வெளியிட்டார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை துளியளவேணும் பேசாத சஜித் பிரேமதாஸ, கடந்த முறையைப் போன்றே, அன்னச் சின்னத்தில் மீண்டும் ஆட்சிக்குவந்தால், என்ன நடக்கும் என்பதை மக்களே உணர்ந்துவிட்டார்கள். என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!