வவுனியா – நெளுக்குளத்தில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராசேந்திரகுளம் பகுதியில், நேற்று இரவு புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை நெளுக்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் சென்ற குழுவினர் இராசேந்திரகுளம் மயானத்திற்கு அண்மித்த பகுதியில் புதையல் தோண்ட தயாராக இருந்த எட்டு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்த நெளுக்குளம் பொலிஸார், அவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான், பூஜைபொருட்கள் என்பனவற்றையும் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைதானவர்கள் வவுனியா விநாயகபுரம், கண்டி, காலி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!