வவுனியாவில், கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!

கிளிநொச்சி பளையிலிருந்து மாத்தறை நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பளையிலிருந்து மாத்தறை நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றவர்களின் பயணப் பொதியினை சோதனையிட்டபோது குறித்த இளைஞர்களிடமிருந்து சுமார் 3கிலோ 300கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையை சேர்ந்த 21 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!