மன்னார் மாவட்ட ஆசிரியர்கள் 2ஆவது நாளாகவும் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 30 ற்கும் அதிகமான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆரம்பித்திருந்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்று 2 ஆவது நாளாக தொடர்கின்றது.

மன்னார் மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களும் குறித்த போராட்டத்திற்கு 2 ஆவது நாளாக தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அதிகமான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை. சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்று திரும்பிச் சென்றுள்ளனர்.

மேலும் பல பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத நிலமையினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!