மட்டக்களப்பு கல்லடியில் விபத்து:மூவர் காயம்!(காணொளி)

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கல்லடி பகுதியில், இன்று காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றது. இதில் மூவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதி பகுதியில், காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன், மட்டக்களப்பு நகர் பகுதியில் இருந்து கல்லடி பகுதியை நோக்கி பயணித்த இராணுவ வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டிக்கு குறுக்கே நாய் பாய்ந்ததன் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, எதிரே வந்த இராணுவ வாகனத்துடன் மோதியது.

இதன்காரணமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவரும் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவரச சிகிச்;சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகன விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!