முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணம் அதிகரிப்பு !

பெற்றோல் விலை  அதிகரிக்கப்பட்டதை அடுத்து மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை  10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.

பெற்றோல் விலை மூன்று ரூபாவினால் அதிகரித்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

 

தற்போது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் புதிய கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!