நீராவியடி பிள்ளையார் சம்பவம்:மட்டக்களப்பில் மௌனப் போராட்டம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டு, மட்டக்களப்பில், கிழக்கிலங்கை இந்து குருமார்  ஒன்றியத்தினரால், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஸ்ரீவீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இக்கண்டனப் பேரணி, மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை நடைபெற்றது .

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் ஆலோசகர் கணேச லோகநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கண்டன மௌன போராட்டத்தில், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தின் குருக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மௌன போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, எமது மத உரிமைகளும் சமமாக மதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!