மருதங்கேணிக்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவையை தரம் 1 சேர்ந்த கு.பிரபாகரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் புத்தளம் கற்பிட்டி மற்றும் தெல்லிப்பளை உதவி பிரதேச செயலாளராகவும், மன்னார் மாந்தை மேற்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளராகவும் வட மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

கு.பிரபாகரமூர்த்தி யப்பானில் பொது முகாமை எனும் முதுமாணி பட்டத்தையும், சிங்கப்பூர் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிர்வாக பயிற்சிகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!