சஜித் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில்!

அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண நகரில் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வீதியால் சென்ற பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களையும் வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆதரவாளர்கள், ஜனாதிபதியாவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டமையை அடுத்து, கிளிநொச்சியில் பொங்கல் மற்றும் இனிப்பு பண்டங்கள் பரிமாறி ஆதரவாளர்களால் மகிழ்ச்சி வெளியிடப்பட்டது.

இன்று பிற்பகல் கிளிநொச்சி டிப்போ சந்தியில் விசேடமான பந்தல் அமைக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு, பொங்கல் மற்றும் இனிப்பு பண்டங்களை பரிமாறி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், முல்லைத்தீவின் பல இடங்களிலும் வெடி கொழுத்தி கொண்டாடி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

மாங்குளம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதான நகர் பகுதிகளில், ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியதை அவதானிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மலையகத்தில் கண்டி, நுவரெலியா, ஹற்றன், தலவாக்கலை என பல பகுதிகளிலும், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், மட்டக்களப்பு நகரில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!