மன்னாரில், புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில், புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்ட புகையிரத ஊழியர்களும், இன்று பணிபுறக்கணிப்பில் இணைந்துள்ளனர்.

சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி, பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மன்னார் புகையிரத நிலைய அதிபர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட புகையிரத உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

 

இதனால், மன்னார் தலைமன்னார் புகையிரத சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதுடன், முற்பதிவுகளை மேற்கொண்டவர்கள் பயணிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!