அறுகம்பையில் நீரலைச்சறுக்கல் 2 ஆவது நாள் நிகழ்வு!

கடல் நீரலைச்சறுக்கல் விளையாட்டுக்கு உலகில் தலைசிறந்த இடங்களில் ஒன்றாக்கருதப்படும் பொத்துவில் அறுகம்பையில் சர்வதேச நீரலைச்சறுக்கல் தரப்படுத்தல் போட்டிகள் மிகக்கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனை இலங்கை சேர்பிங் சம்மேளனம், விளையாட்டு அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி, அம்பாறை மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இன்றைய நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ், கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எஸ்.பாயிஸ் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.நஸீல் உள்ளிட்ட பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த சுமார் 110 துறைசார் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இறுதி நிககழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அதிகளவிலான உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அறுகம்பை நோக்கி வருகின்றமை இப்போட்டிக்கு மேலும் வலுச் சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!