சிலர் கூறுவது போன்று தீவிரவாதத்தை சில நாட்களில் ஒழிக்க முடியாது எனவும் அவ்வாறு யாராவது தெரிவிப்பாறாயின் அவர் முட்டாள் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
களனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சரியான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினாலேயே பாரியளவான உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் இதற்கு ஜனாதிபதி மற்றும் ஏனைய அரச தரப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பு நிலையை தற்போது வரையில் வழமைக்கு திரும்பவில்லை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (சே)