மலையகத்தில் புகையிரத சேவைகள் ஸ்தம்பிப்பு

புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் புகையிரதத்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.

சம்பள பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரத சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள நிலையிலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!