சாய்ந்தமருதில்காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு, விசேட கொடுப்பனவு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைதிரும்பாத காரணத்தினால், அவர்களின் குடும்பத்தினருக்கு விசேட கொடுப்பனவு வழங்க, கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மாளிகைக்காட்டுத் துறையில் இருந்து கடந்த புதன்கிழமை ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை.

இந்நிலையில் 8 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல நஷ்டஈடு அல்லது விசேட கொடுப்பனவை வழங்க கல்முனை மாநகர சபை ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாத அமர்வு நேற்று முதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சபையின் கவனத்திற்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் துணை மருத்துவர் எம்.எம்.சப்ராஸ் மன்சூர் கொண்டு வந்திருந்ததுடன், கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாவது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ எமது மாநகர சபை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கிணங்க, மாநகர சபை முதல்வர் குறித்த விடயத்தை மனிதாபிமான நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டு குறித்த மீனவ குடும்பங்களிற்கு உதவி வழங்க சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!