போரிஸ் ஜோன்ஸ­னுக்கு பதவி வில­கு­வ­தற்கு கடும் அழுத்தம்

பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­தமை சட்­டத்­திற்குப் புறம்­பா­னது என அந் ­நாட்டு உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­ததை­ய ­டுத்து அந்­நாட்டுப் பிர­தமர் போரிஸ் ஜோன் ­ஸ­னுக்கு பதவி வில­கு­வ­தற்கு கடும் அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை உச்­ச­நீ­தி­மன்­றத்தால் ஏக­ம­ன­தாக அளிக்­கப்­பட்ட மேற்­படி தீர்ப்­பை­ய­டுத்து பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபைக்கூட்­டத்தை இடை­ந­டுவில் முடித்துக்கொண்டு தாய்­நாடு திரும்­பி­யுள்ளார்.

பாரா­ளு­மன்றம் கூடும்போது அத்­தி­யா­வ­சி­ய­மான கேள்­விகள் மற்றும் அமைச்சரவை அறிக்­கை­க­ளுக்கு இட­முள்­ள­தாக பாராளு­ ம­ன்ற பிர­தி­நி­திகள் சபையின் சபா­நா­யகர் ஜோன் பெர்கவ் தெரி­வித்தார்.

உச்ச நீதி­மன் றம் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அளித்த தீர்ப்பின்போது பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்கு எந்தக் கார­ணமும் இல்லை எனவும் பிறிக்ஸிட் காலக்­கெ­டு­வான எதிர்­வரும் ஒக்­டோபர் 31 வரை­யான 5 வாரங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்­தைச் செயற்­ப­டுத்த மகா­ரா­ணி­யா­ருக்கு ஆலோ­ச­னை வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தது.

நியூயோர்க் நகரில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த போரிஸ் ஜோன்ஸன் இந்த நீதி­மன்றத் தீர்ப்­பை­ய­டுத்து மகா­ரா­ணி­யாரைத் தொடர்பு கொண்டு அவ­ருடன் உரை­யா­டி­ய­தாக சிரே ஷ்ட அர­சாங்க அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். ஆனால் அந்த அதி­காரி பிர­த­ம­ருக்கும் மகா­ரா­ணி­யா­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற உரை­யாடல் தொடர்பில் மேல­திக விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!