மட்டு, புனித மிக்கேல் கல்லூரியின் மாபெரும் 8 ஆவது நடைபவனி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற புனித மிக்கேல் கல்லூரியின், 8 ஆவது மாபெரும் நடைபவனி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த ஏழு வருடமாக இந்த நடைபவனியை புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்தி வருகின்றது.

8 ஆவது முறையாக நடைபெறும் மாபெரும் நடைபவனி, ‘நீரை பாதுகாப்போம் தூய நீரை பருகுவோம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

நடைபவனி தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கல்லூரி அதிபர் தலைமையில் இன்று கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தொடர்பாக கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா, கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் அருட்தந்தை எம்.ஸ்ரனிஸ்லோஸ் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எந்திரி டி.எ.பிரகாஷ் ஆகியோர் நடைபவனி தொடர்பாக கருத்து தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!