தமிழ் மக்களின் வாக்கு கோட்டாவுக்கே : திஸாநாயக்க

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள், அதிகளவில் கோட்டபாய ராஜபக்சவுக்கு கிடைக்கும் என, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘தமிழ் மக்களின் வாக்குகள் 20 இலட்சம் இருக்கின்றது. அதில் 15 இலட்ச வாக்குளில் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப்பெருமாள், பிள்ளையான், விநாயகமூர்த்தி முரளிதரன், தொண்டமான் உள்ளிட்ட பலரும் இருக்கின்றனர்.

அப்படி எடுக்கின்ற போது, இந்த 15 இலட்ச வாக்குகளில், இப்போது டக்ளஸ், வரதராஜப்பெருமாள், தொண்டமான், கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர், மிக இலகுவாக அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள்.

இதனை தவிர்ந்த இந்து வியாபாரத்துறையினரும், கோட்டாபய ராஜபக்சவின் கருத்துக்கள், தீர்மானங்கள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடு குறித்த அவதானமும் ஆவலும் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல கத்தோலிக்க மக்கள் எப்போதும் எமக்கு நூறு வீத வாக்குகளை இதுவரை அளித்திருக்கவில்லை. 25 அல்லது 30 சத வீத வாக்குகளே அளிக்கப்படுகின்றன.

ஆனாலும் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்திக்கொண்டு கத்தோலிக்க மக்களும் எமக்கு வாக்களிப்பார்கள். அதேபோல எப்போதும் எம்மோடு உண்டு குடித்துவிட்டு, பின்னர் எமக்கு வாக்களிக்காத முஸ்லிம் மக்களும் மௌலவிகளும், இம்முறை கோட்டாவுக்கே வாக்களிப்பதாக உறுதி அளித்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!