ரணில் – சஜித் இணைப்பா? மஹிந்த – கோட்டா இணைப்பா? : டிலான்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு, மஹிந்த – கோட்டா இணைப்பை மட்டுமே தெரிவு செய்ய முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில், சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து, அண்மையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இதில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா…

வடக்கு மக்களிடம் ஒன்றைக் கேட்கின்றோம். கடந்த 5 வருடங்களாக அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது? வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றோம் என்கின்ற வாக்குறுதி மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இந்தியாவிடம் இருந்தும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவி கிடைத்த போதிலும், வீடுகளை யார் ஊடாக நிர்மாணித்துக் கொடுப்பது என்கிற பிரச்சினையிலும், தரகுப் பணத்தை யார் பெறுவது என்கிற நெருக்கடியிலும் அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அதனால் வீடுகளை அமைப்பதற்கான ஆவணங்கள் அனைத்துமே மேசை வரை மட்டும் வரையறுக்கப்பட்டன. ஆகவே கடந்த 5 வருடங்களாக எதனையும் செய்யாத ரணில்- சஜித் யுகமா அல்லது யாழ்ப்பாணத்திற்கே கார்பட் வீதிகளை அமைத்துக் கொடுத்த, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் யாழ். தேவி ரயில் சேவையை ஆரம்பித்த, வடக்கிற்கு தங்களுடைய வாக்குகளினால் மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்குரிமையைக் கொடுத்த, கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த மஹிந்த – கோட்டா யுகமா வேண்டும் என்பதை, வடக்கு, கிழக்கு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கும், மஹிந்த – கோட்டா இணைப்பையே தெரிவு செய்ய வேண்டும். மாறாக ரணில் – சஜித் இணைப்பையல்ல. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ரணில் – சஜித் அல்ல. பக்கமாக பார்த்தாலும் ரணில் – சஜித் அல்ல. எந்த நிறத்திலான கண்ணாடிகளை இட்டுப் பார்த்தாலும் மஹிந்த – கோட்டா இணைப்பை மட்டுமே தெரிவு செய்ய முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!