இலங்கையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல பிக்குவின் ஆட்சி : சாந்தி காட்டம்!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில், நீதி நிலைநாட்டப்படாமல், தெற்கு அரசியல்வாதிகள் தேர்தல் நோக்கத்துடன், வடக்கு நோக்கி வருகை தரக்கூடாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு hராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.


இன்று, வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்..

இன்று இலங்கையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சிமுறை அல்ல மாறாக பிக்குவினுடைய ஆட்சியே என்பதை, நீராவியடி பிள்ளையார், ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் எமக்கு வலியுறுத்தி இருக்கிறது.

நீதி, நியாயம் இந்த இலங்கையிலே செத்துவிட்டது. இங்கு நடைபெறுவது காட்டு ஆட்சி. போரில் தோற்ற பின்னர் கடந்த 10 வருடமாக எமது நிலத்தை விடுவியுங்கள், ஆக்கிரமிப்புக்களை நிறுத்துங்கள் என்று நாம் போராடிவரும் நிலையில் எமது கோரிக்கைகள் புறம்தள்ளபட்டு வந்த நிலையில் இன்று நாட்டின் சட்டவாளருக்கே பிக்கு தாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பிக்குவை காப்பாற்றுவதற்காக பொலிஸ் அதிகாரி பாடுபடுவதையும் எனது கண் முன்னே கண்டேன்.

நீராவியடி பிள்ளையார் ஆலயவிவகாரத்தில் நீதி மன்ற தீர்ப்பினை செயற்படுத்துவதற்கு இயலாது போன பொலிசார் மற்றும், அட்டகாசம் புரிந்த பிக்குகள் கைதுசெய்யப்படும் வரை தேர்தல் நோக்கத்திற்காகவோ, அல்லது தேர்தல் பிரசாரத்திற்காகவோ, எந்த ஒரு அரசியல் வாதியும் இந்த வடக்கு நோக்கி வரக்கூடாது என்பதை எமது மக்கள் சார்பாக நான் தெரிவித்துகொள்கின்றேன்.

வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நீதி நியாயத்தை நிலைநாட்டி ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில்அனைவரும் செயற்படவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்…

கராயன்குளம் மகா வித்தியாலத்தில், 17.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட, ஆசிரியர், அதிபர் விடுதிகள் மற்றும் பாடசாலை சிற்றுண்டிசாலை என்பன, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ், புதிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு hராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கட்டங்களை திறந்து வைத்தார்.

வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடக்கு பிரதேச சபை தலைவர் இ,தணிகாசலம், வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!