யாழ், மல்லாகத்தில் சட்டத்தரணிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில், சட்டத்தரனி க.சுகாஸ் தாக்கப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள், இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம், மல்லாகம் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக, மல்லாகம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, சட்டத்தரணிகள் தமது வாயில் கறுப்பு துணிகளை கட்டியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற கட்டளையை மீறியவர்களை உடனே கைது செய்,
சட்டம் என்ன காடையர்களின் சொத்தா?,
நீதித்துறை சுதந்திரம் எங்கே?,
காவல்துறை பாதுகாப்பு மக்களுக்கா அல்லது காடையர்களுக்கா?,
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை, சட்டத்தரணிகள் கையில் ஏந்தியிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!