மட்டக்களப்பில், மார்ச் 12 இயக்கம் விசேட கலந்துரையாடல்!

அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒருவரையே, இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என, மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 12 இயக்கம், அதன் பங்காளி அமைப்புகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல், நேற்று காலை தொடக்கம் மாலை வரையில் நடைபெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, எதிர்வரும் 5 ஆம் திகதி, சுகததாச விளையாட்டரங்கில் மார்ச் 12 இயக்கம் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை தொடர்பிலும், அதன் போது ஐந்து கேள்விகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வினவுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் அற்றவராகவும் அனைத்து இன மக்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடியவராகவும் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!